புதுடெல்லி: உலகெங்கிலும் உள்ள தலைவர்களின் புகழ் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், பிரதமர் நரேந்திர மோடி மிகவும் பிரபலமான தலைவராக தேர்வாகியுள்ளார். கணக்கெடுக்கப்பட்ட 70 சதவீத மக்களால் அவர் விரும்பப்பட்டுள்ளார். மேலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோரை விட பிரபலமாக இருப்பதை இதன் மூலம் நிரூபித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தி மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வில் உலகின் 13 உலகத் தலைவர்கள் சேர்க்கப்பட்டனர். இதில் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், மெக்சிகோவின் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர், இத்தாலியின் பிரதமர் மரியோ டிராகி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஆகியோர் அடங்குவர். இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் செப்டம்பர் 2 அன்று புதுப்பிக்கப்பட்டது. 


ALSO READ | PM Modi Temple: இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் கட்டிய பாஜக தொண்டர்


தலைவர்களின் புகழ் அட்டவணையை அறிந்து கொள்ளுங்கள்
நரேந்திர மோடி - 70%
லோபஸ் ஒப்ரடோர் - 64%
மரியோ டிராகி - 63%
ஏஞ்சலா மெர்கல் - 52%
ஜோ பிடன் - 48%
ஸ்காட் மோரிசன் - 48%
ஜஸ்டின் ட்ரூடோ - 45%
போரிஸ் ஜான்சன் - 41%
ஜெய்ர் போல்சனாரோ: 39%
மூன் ஜே -இன்- 38%
பெட்ரோ சான்செஸ்: 35%
இம்மானுவேல்
மக்ரோன் - 34% யோஷிட் சுகா - 25%


The Morning Consult வரைபடத்தின்படி, கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை உச்சத்தை அடைந்தபோது பிரதமர் மோடியின் disapproval மதிப்பீடு உச்சத்தை அடைந்தது. எனினும், இப்போது நிலைமை கட்டுக்குள் வந்த பிறகு, பிரதமர் மோடியின் புகழ் மீண்டும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | நரேந்திர மோடி மற்றும் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தின் பெயரை மாற்றவும்: காங்கிரஸ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR