புல்வாமா தாக்குதலை நிகழ்த்திய தீவிரவாத இயக்கத்தினர், எந்த அளவுக்கு பதுங்க முயற்சித்தாலும், நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என மோடி கட்டம்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று முன் தினம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து CRPF வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 44 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இந்த துயர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், யாவத்மாலில் அரசு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். 



இதையடுத்து, மக்களிடம் பேசிய அவர் கூறியதாவது; புல்வாமாவில் நிகழ்ந்ததை எண்ணி நாம் அனைவரும் ஆழ்ந்த வேதனையில் இருக்கிறோம். மகாராஷ்டிர மண்ணின் மகன்கள் இரண்டு பேர் அதில் பலியாகியுள்ளனர். உங்கள் கோபம் எனக்கு புரிகிறது. அவர்களது தியாகம் வீணாகாது. இந்த குற்றத்தை நிகழ்த்திய தீவிரவாத இயக்கத்தினர், எந்த அளவுக்கு அவர்கள் பதுங்க நினைத்தாலும், நிச்சயமாக தண்டிக்கப்படுவர். பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்று மனம் கலங்கினார்.