PM நரேந்திர மோடி படத்துக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை இந்திய சினிமாவில் சமீபகாலமாக புகழ்பெற்ற பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை விவரிக்கும் வர்த்தக ரீதியான திரைப்படம் 23 மொழிகளில் தயாராகியுள்ளது. 


இத்திரைப்படத்தில் பிரதமர் மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். பிஎம் நரேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் நாள் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


நாடாளுமன்றத்துக்கான முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 11 ஆம் தேதிக்குப் பிறகு இந்தத் திரைப்படம் திரைக்கு வர உள்ளதால், அதை வெளியிடுவதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.


இந்தப் படம் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி, பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் பி.எம். நரேந்திர மோடி படைத்தை திரையிட கூடாது என மும்பை, டெல்லி மற்றும் அலகாபாத் உயர்நீதி மன்றங்களில் சிலர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.



இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரும், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலோத் பல்பாசு ஆகியோர் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்களை நேரில் சந்தித்து, நரேந்திரமோடியின் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்குமாறு மனு அளித்தனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
 
இந்த சூழ்நிலையில், PM நரேந்திர மோடி படத்துக்கு தடை கோரிய பொதுநல வழக்கை டெல்லி உயர்நீதிநீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது மட்டும் இன்றி திட்டமிட்டபடி வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது.