புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டாவது டோஸ் கோவிட் -19 தடுப்பூசியை இன்று டெல்லியின் எய்ம்ஸில் போட்டுக்கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி எய்ம்ஸில் பிரதமர் நரேந்திர மோடிக்கு (PM Modi) இரண்டாவது டோசை போட்ட இரண்டு செவிலியர்கள் புதுச்சேரியைச் சேர்ந்த பி.நிவேதா மற்றும் பஞ்சாபை சேர்ந்த நிஷா சர்மா ஆகியோர் ஆவர். தனக்கு தடுப்பூசி போட்ட இரு செவிலியர்களுக்கும் பிரதமட்ர் நன்றி தெரிவித்தார். 


தனது ட்விட்டர் கணக்கில் இது குறித்து எழுதிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்று எய்ம்ஸில் என் இரண்டாவது டோஸ் கோவிட் -19 தடுப்பூசியை போட்டுக்கொண்டேன். வைரஸைத் தோற்கடிப்பதற்கான சில வழிகளில் தடுப்பூசி முக்கியமான ஒரு வழியாகும். தற்போது தடுப்பூசி போட தகுதி உடைய அனைவரும் உடனடியாக அதை போட்டுக்கொள்ள வெண்டும்.  http://CoWin.gov.in இல் பதிவு செய்யுங்கள். ”  என்று எழுதினார்.



"நான் இன்று நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவாக்சின் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டேன். அவர் எங்களுடன் பேசினார். நான் அவரைச் சந்தித்து அவருக்கு தடுப்பூசி போட்டது எனக்கு ஒரு மறக்க முடியாத தருணம்" என்று இன்று பிரதமர் மோடிக்கு தப்பூசி போட்ட செவிலியர் நிஷா சர்மா கூறினார்.


முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, கோவிட் -19 (COVID-19) தடுப்பூசியின் முதல் டோஸை மார்ச் 1 ஆம் தேதி பெற்றார். அந்த நாளில்தான் இந்தியாவில் இரண்டாம் கட்ட கோவிட் -19 தடுப்பூசி செயல்முறை தொடங்கியது.


ALSO READ: மீண்டும் இரவு நேர ஊரடங்கு: அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் Metro train, bus சேவைகள்


அந்த கட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நாள்பட்ட நொயுடைய 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் செயல்முறை தொடங்கியது. ஏப்ரல் 1 முதல் தொடங்கிய அடுத்த கட்டத்தில், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயல்முறை துவங்கியுள்ளது. 


இதற்கிடையில், நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமையைப் பற்றி அறிந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் இன்று ஒரு சந்திப்பை நடத்த உள்ளார்.


மிக முக்கியமாக கருதப்படும் இந்த சந்திப்பில், ​​COVID-19 தொற்றுநோய் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும், தடுப்பூசி (Vaccination) செயல்முறை குறித்தும் பிரதமர் உரையாற்றுவார். இந்த கூட்டம் மாலை 6.30 மணியளவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும். பல மாநிலங்களில் கோவிட் -19 தொற்று திடீரென அதிகரித்திருப்பது குறித்தும் பிரதமர் மோடி விவாதிப்பார்.


தற்போது வரை, இந்தியாவில் 9 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஜனவரி 16 ம் தேதி கோவிட் -19 தடுப்பூசி செயல்முறை இந்தியா முழுவதும் துவங்கியது.


ALSO READ: திகிலைக் கிளப்பும் கொரோனா தொற்று: 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR