இந்த பொங்கல் பண்டிகை நம்மைத் தூண்டட்டும் -பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து
இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் பொங்கல் பண்டிகை நம்மைத் தூண்டட்டும் என பிரதமர் மோடி டிவிட்டர் இல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தை மாதத்தின் முதல் நாளாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. பொங்கல் கொண்டாட்டம் தை 1-ம் தேதி பொங்கல் விழாவும், தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், தை 3-ம் தேதி காணும் என்றும் என்று அதற்கு தை 4-ம் தேதி திருவள்ளுவர் தினம் என்றும் ஆண்டுதோறும் தமிழர்களால் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் பொங்கல் (Pongal) கொண்டாடும் மக்களுக்கு பிரதமர் மோடி (PM Modi) மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ALSO READ | தைத்திருநாளன்று பொங்கல் பானை வைக்க உகந்த நேரம் இதுதான்! விவரம் உள்ளே!
பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்து டிவிட்டர் இல் பதிவிட்டுள்ளார். அதில்.,
‘தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள். தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை இது. நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறுவோமாக. இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும்’ என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
Also Read | சத்குருவின் பொங்கல் வாழ்த்து, விவசாயத்தை போற்றுவோம்...
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR