விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதமர் மோடி மக்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்க்களை தெரிவித்துள்ளார்...!    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விநாயகர் அவதரித்த தினத்தை தான் நாம் விநாயகர் சதுர்த்தி தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறோம். இந்நிலையில், நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 


இந்துக்களின் மிக முக்கியக் கடவுளாக கருதப்படும் முழு முதல் கடவுளான விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில், ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ஆவணி மாதம் 28 -ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மோடி வாழ்த்துச்செய்தியை வெளியிட்டதோடு விநாயகர் படத்தையும் பகிர்ந்துள்ளார். ”விநாயகர் சதுர்த்தி தினமான இன்று வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.