பிரதமர் மோடி இன்று காலை கிர்கிஸ்தான் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய, சீன அதிபர்களுடன் சந்திப்பு!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான, கிர்கிஸ்தானின் தலைநகர், பிஷ்கெக் நகரில், எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின், வருடாந்திர மாநாடு, நாளையும் நாளை மறுநாலும் நடைபெற உள்ளது. இந்த அமைப்பின் உறுப்பு நாடாக இந்தியா உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக் நகரில் நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோரை சந்தித்துப் பேச பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.


மாநாட்டில் பங்கேற்க வருகைதரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் மோடி பேச்சு நடத்த வாய்ப்பில்லை என்றும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மோடியின் பயணத்திற்கு பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்த அந்த நாடு அனுமதித்த போதும், ஈரான் மற்றும் ஓமன் வான்எல்லை வழியாக மோடி கிர்கிஸ்தான் செல்கிறார்.