SCO உச்சி மாநாட்டில் இந்தியா பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கிர்கிஸ்தான் ஜனாதிபதி சூரன்பாய் ஜீன்ஸ்கேவ் அவர்களை சந்தித்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவின் கிங்டாவோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் 2 நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த உச்சிமாநாட்டில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.



SCO உச்சி மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற முழு அமர்வில், 8 உறுப்பு நாட்டுத் தலைவர்களும் பங்கேற்றனர். மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி அவர்கள், தீவிரவாதத்தின் விளைவாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாட்டுக்கு ஆப்கானிஸ்தான் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாகக் தெரிவித்தார். அமைதியை நிலைநாட்டுவதற்காக ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி துணிச்சலான நடவடிக்கை எடுத்துவருவதாக கூறிய அவர், அருகில் உள்ள நாடுகள் அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


ஷாங்காய் நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை வெறும் 6% மட்டுமே என்றும், கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இதை பலமடங்காக உயர்த்த முடியும் என்றும் மோடி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.


அதேவேலையில் இந்தியாவில், சாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் உணவுத் திருவிழா, பவுத்த மதத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இந்த உச்சி மாநாட்டில் இந்தியா உள்பட 8 நாடுகளிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.