அரசு முறைப்பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயுடன் பேச்சு!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு முறை பயணமாக மூன்று நாள் ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ரஷ்யாவுடன் ராணுவம், வர்த்தகம், அணுசக்தி உள்ளிட்ட துறைகளில், 15 ஒப்பந்தங்கள் செய்துள்ளார். மேலும், அடுத்த 20 ஆண்டுகளில் 20 அணு உலைகள் அமைப்பது தொடர்பாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.


விளாடிவோஸ்டோக் நகரில் நடைபெற்ற கிழக்கிந்திய பொருளாதார பேரவை மாநாட்டில், பிரதமர் ஷின்சோ அபேயை மோடி இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பொருளாதாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இரு தலைவர்களும் உறுதி அளித்தனர். 


ஜப்பானின் ஒசாகாவில் நடந்த G20 மாநாட்டின்போது மோடியும் அபேயும் சந்தித்த பிறகு, இப்போது மீண்டும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து மலேசிய பிரதமர் மகாதீர் பின் முகமது, மங்கோலிய ஜனாதிபதி கால்ட்மாகின் பட்டுல்கா ஆகியோரையும் மோடி சந்தித்து பேசினார்.



இந்த சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி, "விளாடிவோஸ்டோக்கில் பிரதமர் அபே ஷின்சோவை சந்தித்ததில் மகிழ்ச்சி. நாங்கள் பரந்த அளவிலான பாடங்களில் ஆழ்ந்த கலந்துரையாடல்களை மேற்கொண்டோம், குறிப்பாக நமது நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துகிறோம். ஒரு சிறந்த கிரகத்தை உருவாக்க எங்கள் நாடுகளும் பல்வேறு உலகளாவிய மன்றங்களில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன" என குறிப்பிட்டுள்ளார்.