புதுடில்லி: இன்று (சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி "இந்தியா போஸ்ட் பேமன்ட் பாங்க்" (ஐ.பி.பி.பி.) கிளைகளை தல்கடோரா விளையாட்டரங்கத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும், அதாவது கிராம புறங்களில் வங்கிச்சேவைகள் எளிதாக கிடைக்கும் வகையில் தபால் அஞ்சலகங்கள் மூலம்  "இந்தியா போஸ்ட் பேமன்ட் பாங்க்" (ஐ.பி.பி.பி.) கிளைகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அந்த வரிசையில், முதலில் 650 அஞ்சலக வங்கி கிளைகளை இன்று டெல்லி தல்கடோரா மைதானத்தில் இருந்து திறந்து வைத்தார் பிரதமர் மோடி. இந்த அஞ்சலக வங்கி கிளைகளின் கீழ் 3,250 சேவை மையங்கள் செயல்படும். இதன்மூலம் இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரம் அஞ்சலகங்கள் இணைக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.


 



இன்று "இந்தியா போஸ்ட் பேமன்ட் பாங்க்" (ஐ.பி.பி.பி.) கிளைகளை திறந்து வைத்து பேசிய பிரதமர் கூறியதாவது:-


 "இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கி மூலம் நாட்டில் புதிய வங்கித் துவக்கத்தை ஆரம்பித்துள்ளது. எங்கள் அரசாங்கம் சீர்திருத்தம், மாற்றம் மற்றும் செயற்பாடு ஆகியவற்றில் பணியாற்றுகின்றது. இந்த வங்கியில் (IPPB), சேமிப்பு கணக்கு மற்றும் தனிப்பட்ட கணக்கு என இரு சேமிப்புகளும் திறக்கப்படும். சேமிப்பு கணக்கில், வாடிக்கையாளர் ஒரு லட்ச ரூபாய் வரை சேமிக்கலாம். இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு திறந்தால், அதிக வட்டி கிடைக்கும். கணக்கில் குறைந்தபட்ச சமநிலையை பராமரிக்கா தேவை இல்லை. இந்த அஞ்சலக வங்கியில் 100 சதவீத பங்கு அரசு உடையது.


 



வீட்டில் இருந்தபடியே நீங்கள் வங்கியில் கணக்கு திறக்கலாம். வங்கியின் சேவைகளை பெறலாம். நாட்டில் இருக்கும் 1.55 லட்சம் தபால் அஞ்சலகங்கள்  "இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கியாக மாற்றப்படும் என பிரதமர் கூறினார்.


 



இந்த அஞ்சலக வங்கி கிளைகளின் சிறப்பு அம்சமே, ஊழியர்கள் வீடு தேடி வந்து பணம் தருவார்கள். இதற்காக கட்டணமாக ரூ.25 வசூலிக்கப்படும். இந்த அஞ்சலக வங்கியின் மூலம் மின் கட்டணம், தேர்வு கட்டணம், தொலைபேசி கட்டணம் ஆகியவற்றையும் செலுத்திக் கொள்ளலாம். இருப்பு தொகை வைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.