புல்வாமா தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட CRPF வீரர்களின் உடல்கள் விமானம் மூலம் தலைநகர் டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வீரர்களது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தில் மோதி தற்கொலை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 40 வீரர்கள் பலியாகினர். 


இந்த துயர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. 



நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் பலியான வீரர்களுக்கு, காஷ்மீரில் இறுதி மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர்களது உடல்கள், காஷ்மீரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு, விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. 


டெல்லி கொண்டுவரப்பட்ட வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


டெல்லியில் வைக்கப்பட்டுள்ள வீரர்களின் உடல்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளன.


இதற்கிடையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின்  இறுதி யாத்திரையில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.