நமது எதிரி கூறும் பொய்யான காரணங்களை நாம் நம்பக் கூடாது. அது நம்மை பிரித்தாள முயற்சி செய்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் என எச்சரித்த பிரதமர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று காணொளி மூலம் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த நேரத்தில் நாட்டின் உணர்வுகள் வேறுபட்ட நிலையில் உள்ளன. ஒன்றாக இருப்போம், ஒன்றாக போராடுவோம் ஒன்றாக வெற்றி காண்போம் எனக் கூறியுள்ளார். 


மேலும் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, முழு நாடும் நமது வீரர்களுடன் நிற்கிறது. நமது நாட்டின் துணிச்சலான வீரர்கள் எல்லையிலும் எல்லையை கடந்தும் நமக்காக பணியாற்றி வருகின்றனர். நாம் எல்லோரும் இந்தியாவின் குடிமக்கள். நாட்டின் பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்திற்காக நாம் அனைவரும் இரவு பகல் பாராமல் துணை நிற்க வேண்டும். இது தான் நமது முதல் பொறுப்பு ஆகும் எனவும் கூறினார். 


இன்று நாம் நமக்கு முன்னால் ஒரு வலுவான இந்தியாவை காணக்கூடிய இடத்திற்கான சிறு இடைவெளியில் நிற்கிறோம். இந்த வலுவான புகழ்பெற்ற புதிய இந்தியாவை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. பாரத மாதாவின் அடிவாரத்தில் ஒரு வலுவான ஒரு நம்பிக்கையான சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும். இதற்க்காக நாட்டின் குடிமக்களான பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் ஒன்றாக நன்றியுள்ளவர்களாக மாற வேண்டும். 


நமது எதிரி கூறும் பொய்யான காரணங்களை நாம் நம்பக் கூடாது. அவர்கள் நம்மை பிரித்தாள முயற்சி செய்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். மத்திய அரசு மீது இந்திய மக்கள் முழு நம்பிக்கையை வைக்க வேண்டும். எதிரியின் சூழ்ச்சியை வீழ்த்துவோம். 


இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.