புதுடெல்லி: மனிதகுலத்தின் பாதுகாப்பிற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளுடன் இந்தியா, கொரோனாவிற்கு எதிரான போரில் தயாராக உள்ளது. உலகம் தடுப்பூசிகளுக்காகக் காத்திருப்பது மட்டுமல்லாமல், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை நாடு எவ்வாறு நடத்துகிறது என்பதையும் கவனித்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தார் .


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினத்தின் 16வது மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றிய மோடி, உலகில் உயிரோட்டமுள்ள துடிப்பான ஜனநாயகம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது என்றும் வலியுறுத்தினார்.


"இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது, ​​இந்தியா சிதைந்துவிடும் என்றும் இங்கு ஜனநாயகம் சாத்தியமில்லை என்றும் கூறப்பட்டது. இன்றைய ஒன்றுபட்ட இந்திய உலகில் உயிரோட்டமுள்ள துடிப்பான ஜனநாயகம் கொண்ட நாடாக உள்ளது "என்று பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi ) கூறினார்.
கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை குறித்து பேசிய பிரதமர் மோடி, மிகக் குறைந்த இறப்பு விகிதம் மற்றும் குணமடையும் விகிதத்தை அதிக அளவு   கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்றார்.


"உலகின் மருந்தகமாக இருக்கும் இந்தியா, கடந்த காலத்தில் உலகில் தேவைப்படும் அனைத்து நாடுகளுக்கு முக்கியமான மருந்துகளை வழங்கி உதவியுள்ளது. உலகம் இந்தியாவின் தடுப்பூசிகளுக்காகக் (Corona Vaccine) காத்திருக்கிறது "என்று அவர் கூறினார்.


தொற்றுநோய்களின் போது, ​​இந்தியர்கள் ஒன்றுபட்டு, நாடு ஒற்றுமையுடன் செயபட்ட விதம் ஈடுஇணையற்றது என்றும் மோடி கூறினார்.


ALSO READ | இன்னும் சில நாட்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிதொடங்கும்: Dr.Harsh Vardhan


ஊழலைத் ஒழிக்க இந்தியா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. கோடி கணக்கிலான ரூபாய் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது என்றார்.


"பல நாடுகளின் தலைவர்களுடன் பேசும் போது, அந்த நாடுகளில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் எவ்வாறு ஒரு உதவிக் கையை நீட்டியுள்ளார்கள், இந்த கடினமான காலங்களில் கூட உதவிகளை வழங்குவதில் தலைமை பண்புடன் அரும் பங்காற்றியுள்ளதை அறிந்தேன். இது எனக்கு பெருமை தரும் விஷயம்" என்று மோடி கூறினார்.


நாடு எப்போதும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உறுதுணையாக நிற்கும் என கூறிய அவர், தொற்றுநோய்களின் போது அரசாங்கத்தின் வந்தே பாரத் முயற்சியின் கீழ் 45 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டனர் என்றார்.


16 வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு 2021 இன் கருப்பொருள் "ஆத்மனிர்பர் பாரதத்திற்கான பங்களிப்பு" என்பதாகும்.


ALSO READ | பறவைக் காய்ச்சல்: சிக்கன், முட்டை சாப்பிடுவதை நிறுத்த வேண்டுமா? WHO கூறுவது என்ன..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR