யோகா பயிற்சியை தவிர்த்து தாயாரை சந்தித்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி ஆற்றல் மிக்க குஜராத் என்ற சர்வதேச கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இருநாள் பயணமாக நேற்று குஜராத் மாநிலத்துக்கு வந்தார்.
காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடி ஆற்றல் மிக்க குஜராத் என்ற சர்வதேச கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இருநாள் பயணமாக நேற்று குஜராத் மாநிலத்துக்கு வந்தார்.
வழக்கமாக காலையில் யோகாசன பயிற்சிகள் மேற்கொள்வதை தனது வாடிக்கையாக கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று அதிகாலை எழுந்ததும் காந்தி நகரில் உள்ள தனது சகோதரரின் வீட்டுக்கு சென்றார்.
இந்த சந்திப்புக்காக இன்றைய யோகா பயிற்சியை துறந்த அவர், தற்போது 97 வயதாகும் தனது தாயார் ஹிரா பென்னுடன் சிற்றுண்டி அருந்தி மகிழ்ந்த அனுபவத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், தாயாரிடம் விடைபெற்று மகாத்மா காந்தி மந்திருக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.