பாகிஸ்தான் தேசிய தினத்துக்கு பாகிஸ்தான் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லாகூர் ஒப்பந்தத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 23-ம் தேதி பாகிஸ்தான் தேசியதினம் கொண்டாடப்படுகிறது. அதைதொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதில், ‘


‘தேசிய தினம் கொண்டாடும் பாகிஸ்தான் மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். துணை கண்டத்தில் பயங்கரவாதம் மற்றும் வன்முறை இன்றி ஜனநாயகம், அமைதி மற்றும் செல்வசெழிப்புடன் மக்கள் இணைந்து வாழும் நேரம் இது’’ 


என தெரிவித்துள்ளார். அதற்காக பிரதமர் மோடிக்கும் இம்ரான்கான் நன்றி தெரிவித்தார்.