பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக்! பிட் காயின் பற்றிய போஸ்டால் பரபரப்பு!!
பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட பிறகு, #Hacked என்ற ஹேஷ்டேக் இந்தியாவில் டிரெண்டாகத் தொடங்கியது.
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு சிறிது நேரத்திற்கு ஹேக் செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலகம் (PMO) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
எனினும், மிக விரைவாக இது சரி செய்யப்பட்டு விட்டதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ட்விட்டர் நிறுவனத்துக்கு தெரிவிகக்ப்பட்டது. பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பிரதமரின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கான @narendramodi உடனடியாக பாதுகாக்கப்பட்டது என பிரதமர் அலுவலகம் ( PMO India) பின்னர் ஒரு ட்வீட்டில் தெரிவித்தது. பிரதமரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட நேரத்தில் அதில் பதிவிடப்பட்ட பதிவுகளை புறக்கணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் ட்விட்டர் (Twitter) கணக்கு ஹேக் செய்யப்பட்ட பிறகு, #Hacked என்ற ஹேஷ்டேக் இந்தியாவில் டிரெண்டாகத் தொடங்கியது. பல பயனர்களால் ட்விட்டரில் பகிரப்பட்ட ஸ்கிரீன்ஷாட்களின்படி, பிரதமர் மோடியின் கணக்கில் இருந்து "இந்தியா அதிகாரப்பூர்வமாக பிட்காயினை சட்டப்பூர்வ டெண்டராக ஏற்றுக்கொண்டது" என்று ட்வீட்கள் வெளியிடப்பட்டன.
ALSO READ | Cryptocurrency: கிரிப்டோகரன்ஸி குறித்து பிரதமர் மோடி முக்கிய கூட்டம்
"இந்தியா அதிகாரப்பூர்வமாக பிட்காயினை சட்டப்பூர்வ டெண்டராக ஏற்றுக்கொண்டது. அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக 500 BTC ஐ வாங்கி நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் விநியோகித்து வருகிறது" என்று ஹேக் செய்யப்பட்ட கணக்கிலிருந்து ட்வீட் செய்யப்பட்டது. எனினும், இந்த ட்வீட் தற்போது நீக்கப்பட்டு விட்டது.
73 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு, எவ்வளவு நேரத்திற்கு ஹேக் செய்யப்பட்டது என்பது உடனடியாகத் தெரியவில்லை.
ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் கணக்கைப் உடனடியாக சரி செய்து பாதுகாக்க ட்விட்டர் தேவையான நடவடிக்கைகளை எடுத்தது என்றும் இதுவரை செய்யப்பட்ட விசாரணையில் தற்போது வேறு எந்த பாதிப்புக்குள்ளான கணக்குகளைப் பற்றிய தகவலும் இல்லை என்றும் ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் ஒரு மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது.
2020 செப்டம்பரில் பிரதமர் மோடியின் (PM Modi) தனிப்பட்ட வலைத்தளத்தின் @narendramodi_in என்ற ட்விட்டர் கணக்கிலும் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்தது. இந்த கணக்கு ஹேக் செய்யப்பட்ட போது பதிவிடப்பட்ட இடுகைகளில் கிரிப்டோகரன்சி மூலம் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தற்போது ஹேக் செய்யப்பட்டபோதும், பிட் காயின் பற்றிய செய்தியே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | ஒமிக்ரான் பீதி; மும்பையில் இன்றும், நாளையும் 144 தடை அமல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR