திருவள்ளுவர் கோட்பாடுகள் அறிவுசார் ஆழத்திற்காக தனித்து நிற்கின்றன: பிரதமர் மோடி
உலகப் பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலகப் பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஒன்றரை அடிகளில் வாழ்வியலுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் போதித்தவர் திருவள்ளுவர். 133 அதிகாரங்களில் ஒரு அதிகாரத்திற்கு 10 குறள் வீதம் 1330 குறள்களை திருவள்ளுவர் நமக்கு வாழ்க்கையின் பாடத்தை அருளியுள்ளார்.
இந்நிலையில், திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை, பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன என அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையிலுள்ள திருவள்ளுவர் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், தமிழக ஆளுநர் ஆர். என். ரவி மற்றும் தமிழக தொழில்துறை மற்றும் தமிழ் ஆட்சி மொழி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ALSO READ | தமிழகத்தில் பொங்கும் ‘பொங்கலோ பொங்கல்’; மற்ற மாநிலங்களில் 'மகரசங்கராந்தி’..!!
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR