சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு: பிரதமர் மோடி, டிரம்ப் மகள் பங்கேற்பு!
ஐதராபாத்தில் நடக்க இருக்கும் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள், இவாங்கா இன்று அதிகாலை ஐதராபாத் வந்தார்.
ஐதராபாத்தில் நடக்க இருக்கும் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள், இவாங்கா இன்று அதிகாலை ஐதராபாத் வந்தார்.
எரிசக்தி மற்றும் அடிப்படை கட்டமைப்பு, ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் வாழ்க்கை அறிவியல், நிதி தொழில்நுட்பம் மற்றும், 'டிஜிட்டல்' பொருளாதாரம், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய நான்கு முக்கிய துறைகள் குறித்து விவாதிப்பதாக ஐதராபாத்தில், சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு இன்று முதல் அடுத்த 3 நாட்கள் நடக்க உள்ளது.
இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். இம்மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 1,500க்கும் அதிகமான தொழில் முனைவோர்கள் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.