#PNBFraud: நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.5,100 கோடி நகைகள் பறிமுதல்
மோசடி பரிவர்த்தனை செய்த நீரவ் மோடியின் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து ரூ.5,100 கோடி நகைகளை பறிமுதல் செய்துள்ளது அமலாக்கத்துறை.
குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நீரவ் மோடி முறையான தகவல்களை அளிக்காமல் ரூ 280 கோடி முறைகேடாக கடன் வாங்கி உள்ளார் என அவர் மீது கடந்த மாதம் 29-ம் தேதி பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று பஞ்சாப் நேஷனல் வங்கி மும்பை கிளை அலுவலகத்தில் சுமார் 1.77 பில்லியன் மோசடி பரிவர்த்தனைகளை நடந்துள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது.
இதனையடுத்து, மும்பையில் உள்ள வைர நகை வியாபாரியான நீரவ் மோடியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்க துறை இன்று சோதனை நடத்தி உள்ளனர். மேலும் மும்பை, குஜ்ராத், டெல்லி என நாடு முழுவதும் நீரவ் மோடிக்கு சொந்தமான 17 இடங்களில் சோதனை மேற்கொண்டது அமலாக்கத்துறை.
பிரதமரை கட்டிப்பிடித்தால் இந்தியாவில் கொள்ளையடிக்கலாம் -ராகுல் காந்தி தாக்கு
இந்த சோதனையின் போது 5 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் விலை மதிப்பற்ற வைர கற்களை பறிமுதல் செய்துள்ளனர். முக்கியமான 95 ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர் அமலாக்கத்துறை. .