PNB மோசடி: 9 கூடுதல் கணக்குகளை இணைத்தது வருமானவரி துறை!
பஞ்சாப் நேஷ்னல் வங்கி ஊழல் வழக்கு தொடர்பாக, மத்திய புலனாய்வு துறையானது பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி-யை கைது செய்துள்ளது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி ஊழல் வழக்கு தொடர்பாக, மத்திய புலனாய்வு துறையானது பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி-யை கைது செய்துள்ளது.
ஷெட்டியுடன் சேர்த்து ஒற்றை சாளர ஆபரேட்டர் (SWO) மனோஜ் காரத் மற்றும் நிராவ் மோடி குழும நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ கையொப்பரான ஹேமந்த் பாட் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20:30 17-02-2018
PNB மோசடி வழக்கில் இன்னும் 9 கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளது!
20:19 17-02-2018
பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் ப்ராடி ஹவுஸ் கிளையில் CBI சோதனை நடத்தியுள்ளது. இது தொடர்பாக 6 அதிகாரிகளிடம் விசாரணை நடைப்பெற்று வருகிறுத!
இன்று சிறப்பு CBI நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்ட இவர்களுக்கு மார்ச் 3 ஆம் நாள் வரை காவல் கண்கானிப்பில் இருக்க உத்தரிவிட்டுள்ளது!
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் 1.77 பில்லியன் அளவுக்கு சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்தது, முன்னதாக இது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது...
மும்பையில் உள்ள வங்கி கிளையில், சட்ட விரோதமாகவும், உரிய அங்கீகாரம் பெறாமலும் பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பலர் பயனடைந்துள்ளனர். வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே பணிப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு முறைகேடாக சுமார் 1.77 பில்லியன் அளவுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் விசாரணை அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தது. இதனையடுத்து பங்குச் சந்தையில் பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் பங்குகள் சரிய தொடங்கியது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்னர் என்பது குறிப்படத்தக்கது!