MP-ஆக பதவியேற்ற வைகோ-விற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து!
மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து கூறி கவிதை எழுதியுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து கூறி கவிதை எழுதியுள்ளார்.
மாநிலங்களவை அதிமுக எம்பிக்களான மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜுன், ரத்தினவேல், லட்சுமணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைகிறது.
தமிழகத்தில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்களுக்கு ஏற்கனவே நடைபெற்ற தேர்தலில், திமுக மற்றும் அதிமுக தரப்பில் இருந்து தலா 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திமுக சார்பில் தொமுச பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் மற்றும் கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மாநிலங்களவையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட அ.தி.மு.க. மற்றும் திமுக எம்பிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அதன்படி, தி.மு.க. சார்பில் தேர்வான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதவியேற்றுக் கொண்டார். திமுக சார்பில் சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோரும் பதவியேற்றனர். ‘இந்திய இறையாண்மையை பற்றி நிற்பேன்’என தமிழில் உறுதிமொழி கூறி மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார் வைகோ.
இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து கூறி கவிதை எழுதியுள்ளார்.
-- வைரமுத்து அவர்களில் கவிதை --
வாழ்த்துக்கள் வைகோ...
சிறுத்தைபோல் நடந்து சென்றாய்
செம்மொழி உறுதி பூண்டாய்
நிறுத்தவே முடியவில்லை
நீள்விழி வடித்த கண்ணீர்
போர்த்திறம் பழக்கு – விட்டுப்
போகட்டும் வழக்கு – உன்
வார்த்தைகள் முழக்கு – நீ
வடக்கிலே கிழக்கு