மாணவிகள் மீது பணத்தை வாரி இறைத்த காவலர், வைரலாகும் Video!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் நடைப்பெற்ற குடியரசு தின விழாவில், மாணவிகள் மீது பணத்தை வாரி இறைத்த காவலரை அம்மாநில காவல்துறை இடைநீக்கம் செய்துள்ளது!
நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் நடைப்பெற்ற குடியரசு தின விழாவில், மாணவிகள் மீது பணத்தை வாரி இறைத்த காவலரை அம்மாநில காவல்துறை இடைநீக்கம் செய்துள்ளது!
கடந்த ஜனவரி 26-ஆம் நாள் நாடுமுழுவதும் 70-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் நாக்பூர் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியல் பங்கேற்ற காவலர் ஒருவர், காவலர் சீறுடையுடன் மேடையில் ஏறி, நடனமாடிய மாணவிகள் மீது பணத்தை வாரி இறைந்துள்ளார்.
இந்த சம்பவம் இணையத்தில் வீடியாவாக பரவி வைரலானது. நாடு முழுவதும் அனைவரது கவனத்தை ஈர்த்த இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டவர் பெயர் ப்ரமோத் வாக்கி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து குற்றம்சாட்டப்ட்ட ப்ரமோத் மாநில காவல்துறையால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கேளிக்கை விடுதிகளில் ஆபாச நடனங்கள் நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த அதிரடி தீர்ப்பு வெளியாகி சில தினங்களில் அம்மாநில பள்ளியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.