உபி-யில் கழுதை ரௌடி ஆன கதை தெரியுமா?
மரம் செடிகளை நாசம் செய்ததாக கழுதை கைது செய்யப்பட்டு ஊராய் சிறையில் அடைக்கப்பட்டது
ஜலான்: மரம், செடிகளை நாசம் செய்ததாக கைது செய்யப்பட்ட கழுதைகள், 4 நாள் சிறை வாசத்திற்கு பிறகு உபி கழுதைகள் இன்று விடுதலையாகின.
உத்திரப்பிரதேச மாநிலம் ஜலான் பகுதியில், மரம் செடிகளை நாசம் செய்ததாக கழுதை கைது செய்யப்பட்டு ஊராய் சிறையில் அடைக்கப்பட்டது.
இதனையடுத்து 4 நாள் சிறைவாசத்திற்கு பின்னர், அக்கழுதைகளை ஊராய் சிறை காவலர்கள் விடுவித்துள்ளனர்.
இதுகுறித்து ஊராய் சிறையின் தலைமை காவலர் RK மிஷ்ரா தெரிவிக்கையில், கைது செய்யப்பட்ட கழுதைகள் விலைமதிப்பு இல்லா செடிகொடிகளை நாசம் செய்துவிட்டது. கழுதையின் உரிமையாளரிடன் எச்சரிக்கை செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அக்கழுதை கைது செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்.