ஜம்மு துப்பாக்கிச்சூட்டில் 2 பாதுகாப்பு படை வீரர் படுகாயம்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பட்டமலூ பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் பலி..
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பட்டமலூ பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் பலி..
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள பட்டமலூ பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகப்புபடையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனை தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்துள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் சிறப்பு அதிரடி படையை சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 2 பேர் உள்பட 3 பேர் காயமடைந்து உள்ளனர். தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது.
இந்த தாக்குதலை அடுத்து இணையதள சேவைகள் தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளன.