கெஹ்லாட் அரசுக்கு நெருக்கடி! முதல்வர், பைலட், சுயேச்சைகளுக்கு காவல் துறை நோட்டீஸ்
அசோக் கெஹ்லாட், சச்சின் பைலட் மற்றும் வேறும் 13 சுயேச்சை MLAக்களுக்கு SOG நோட்டீஸ் அனுப்பியுள்ளது
கெஹ்லாட் அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. மாநில முதல்வர், பைலட் உட்பட 13 சுயேச்சைகளுக்கு காவல் துறையின் SOG, அதாவது சிறப்பு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராஜஸ்தான் காங்கிரசில் உட் கட்சி பூசல்கள் அதிகரித்து வருகின்றன. முதல்வர் அசோக் கெஹ்லோட் மற்றும் சச்சின் பைலட் இடையே வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன என கூறப்படுகிறது.
ஜெய்ப்பூர் / புதுடெல்லி: ராஜஸ்தானின் அசோக் கெஹ்லோட் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானின் 13 சுயேச்சை எம்.எல்.ஏக்களுக்கு ராஜஸ்தான் காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சச்சின் பைலட் உட்பட முதலமைச்சர் அசோக் கெஹ்லோட்டுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் அசோக் கெஹ்லோட் மற்றும் சச்சின் பைலட் இடையே வேறுபாடுகள் அதிகரித்து வருவதாக ஆதாரங்கள் கூறுகின்றன. ஹரியானாவில் உள்ள மானேசரில் 10 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ளனர். சச்சின் பைலட் முகாமின் பல எம்.எல்.ஏக்களின் தொலைபேசிகள் முடக்கப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ.க்களை டெல்லிக்கு வரவழைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
ALSO READ | நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் : அமைச்சர் பிரகலாத் ஜோஷி
இதற்கிடையில், ராஜஸ்தான் காவல் துறையில் சிறப்பு நடவடிக்கை குழு துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக ஆதாரங்கள் வந்துள்ளன. நோட்டீஸ் கிடைத்ததால், சச்சின் பைலட் அரசின் மீது கோபமாக இருக்கிறார் என கூறப்படுகிறது. சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லியில் இருக்கிறார். SOG கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஹரி பிரசாத் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸில் , சச்சின் பைலட்ன் வாக்குமூலத்தை பதிவு செய்ய பொருத்தமான நேரம், தேதி மற்றும் இடத்தை கூறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
சச்சின் பைலட் இப்போது அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என ஆதாரங்கள் கூறுகின்றன. பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை விட்டு விலக வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தானின் 13 சுயேச்சை எம்.எல்.ஏக்களுக்கும் SOG நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சச்சின் பைலட் ஆதரவு அமைச்சர் ரமேஷ் மீனாவுக்கும் SOG நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ALSO READ | கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தாராவி எடுத்துக்காட்டாக விளங்குகிறது: WHO புகழாரம்
ராஜஸ்தான் அரசியல் நிலைமை தொடர்பாக சோனியா காந்தியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அறிக்கை கூறுகிறது. அனைத்து எம்.எல்.ஏக்களும் கட்சியுடன் தொடர்பில் உள்ளனர் என்றாலும் சில எம்.எல்.ஏக்கள் அதிருப்தியாக உள்ளனர் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.