உத்தராகண்ட் மாநில அரசியலில் நெருக்கடி -முதல்வர் தீரத் சிங் பதவி விலகினார்
2021 மார்ச் 10 அன்று தீரத் சிங் ராவத் மாநிலத்தின் ஒன்பதாவது முதல்வராக பதவியேற்றார். ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு, அரசியல் நெருக்கடி காரணமாக பதவியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி: பாஜக ஆளும் உத்தராகண்ட் மாநிலத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரகாண்ட் மாநில முதல்வர் தீரத் சிங் ரவாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்ற தீரத் சிங் ராவத், கட்சியின் உயர்மட்டத் தலைவர்களை சந்தித்த பின்னர் ராஜினாமா செய்துள்ளார். உத்தராகண்ட் மாநில பாஜக தலைவர்கள் பலர் தீரத் சிங் ராவத் மீது அதிருப்தியில் இருந்ததால், கட்சி உயர்மட்டக்குழு அவரை டெல்லிக்கு அழைத்திருந்தது. பாஜக கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்த பின்னர் ராஜினாமா செய்துள்ளார்.
2021 மார்ச் 10 அன்று தீரத் சிங் ராவத் மாநிலத்தின் ஒன்பதாவது முதல்வராக பதவியேற்றார். ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு, அரசியல் நெருக்கடி காரணமாக பதவியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி திருவேந்திர சிங் ராவத்துக்கு பதிலாக தீரத் சிங் ராவத் முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். ஆனால் அவர் பதவியேற்ற பின்னர், மாநில பாஜக தலைவர்கள் தொடர்ந்து கடும் அதிருப்தியில் இருந்தனர். அத்தகைய சூழ்நிலையில், பாஜக மேலிடம் மேற்கொண்ட ஆலோசனைக்கு பிறகு, தீரத் சிங் ரவாத்தை பதவியை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொண்டது.
தற்போது மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தவிர்க்க, விரைவில் பாஜக தரப்பில் புதிய சட்டமன்றத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இதற்காக, சட்டமன்றக் கட்சி கூட்டம் எப்பொழுது நடைபெறும் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில், தீரத் சிங்குக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கக் வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR