சந்திரசேகர் ராவை எதிர்த்து போட்டியிடும் காங். வேட்பாளர் தற்கொலைக்கு முயற்சி


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சந்திரசேகர் ராவை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தற்கொலைக்கு முயற்சித்தால் பரபரப்பு....


தெலங்கானாவில் முதல்வர் சந்திர சேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி (டி.ஆர்.எஸ்.) ஆட்சியில் இருந்து வருகிறது. இங்கு சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சியினருனம் தீவிர பிரட்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரதாப் ரெட்டி காவல் நிலையத்திற்கு வெளியில் தற்கொலைக்கு முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் காவல்நிலையம் முன்பாக தீக்குளிக்க முயன்றதால் பதற்றம் நிலவியது. சந்திரசேகர் ராவ் போட்டியிடும் காஜ்வெல் தொகுதியில் அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் வண்டேரு (vanteru) பிரதாப் ரெட்டி. 
இவருடைய வீட்டில் பணம் மற்றும் மதுபாட்டில்கள் விநியோகிக்கப்படுவதாக எழுந்த 


முன்னதாக, புகாரை அடுத்து போலீசார் பாதுகாப்புடன் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.சோதனையில் எதுவும் சிக்காததை அடுத்து அவர்கள் திரும்பிச் சென்றனர். இந்த நிலையில் நேற்றிரவு பெட்பாசீராபாத் (petbasheerabad) காவல்நிலையம் முன்பு தொண்டர்களுடன் திரண்ட பிரதாப் ரெட்டி, உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை போலீசார் தடுத்தனர்.