542 பாராளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது...
இந்தியாவின் 17-வது மக்களவை தேர்தலுக்கான 542 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது!
இந்தியாவின் 17-வது மக்களவை தேர்தலுக்கான 542 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது!
நாடுமுழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைப்பெற்றது. 7-ஆம் கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்த நிலையில் நாட்டின் 542/543 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்றோடு முடிவடைந்தது.
இன்றைய தேர்தலை பொருத்தவரையில் அதிகபட்சமாக மேற்கு வங்காளம் மாநிலத்தில் 73.05% வாக்கு பதிவானது. இதைத்தொடர்ந்து ஜார்கண்ட் 70.05%, மத்திய பிரதேசம் 69.83%, இமாச்சல் பிரதேஷ் 66.18%, சண்டிகர் 63.57%, பஞ்சாப் 58.81%, உத்திர பிரதேசம் 54.37% வாக்குகள் பதிவாகின. குறைந்த பட்சமாக பீகாரில் 49.92% வாக்குகள் பதிவாகின. ஆக ஒட்டுமொத்தமாக 60.21% வாக்குகள் இறுதி கட்ட வாக்குப்பதிவில் பதிவாகியுள்ளன.
தேர்தலுக்கு பின்னர் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி தேர்தலுக்கு முன்னதாக ஆவணமின்றி பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் பட்டியல்.,
ஆவணமின்றி பிடிக்கப்பட்ட பணம் 839.03 கோடி
294.41 கோடி மதிப்பிலான மதுபானங்கள்
1,270.37 கோடி மதிப்பிலான போதை வஸ்த்துக்கள்.
இதர பொருட்கள் - 58.56 கோடி