சமந்தா ரூத் பிரபு இடுகையிடப்பட்ட பின்னர் இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டதாக பூஜா ஹெக்டே கூறுகிறார்... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"தயவுசெய்து எந்த புதிய தொடர்பையும்  ஏற்க வேண்டாம் அல்லது  எவர் ஒருவருக்கும்  தனிப்பட்ட தகவல்களை தர  வேண்டாம்" என்னும்  கருத்தை  பூஜா ஹெக்டே ட்வீட் செய்துள்ளார். 


நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டு  விட்டதாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது கணக்கின் மூலம்  சக நடிகை  சமந்தா ரூத் பிரபு பற்றிய தவறான மீம்ஸ்கள் பகிரப்பட்டதை அடுத்து, ரசிகர்கள்  கோபம்  அடைந்தனர். எனவே, ட்விட்டரில்  #PoojaMustApologizeSamantha என்று பூஜா சமந்தாவிடம்  மன்னிப்பு கேட்க  தூண்டும் பதிவை  ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்தனர். பூஜாவின் விளக்கத்தை  கேட்காத  சமந்தாவின் ரசிகர்களின்  ஆவேசமான  கோபமான பதிவுகள் இப்போது சமூக ஊடகங்களில்   பிரபலமாக உள்ளது. ஆனால் திங்கள்கிழமை இரவு, தனது இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், அதை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பூஜா ட்வீட் செய்துள்ளார். 




"தயவுசெய்து எந்தவொரு  புதிய தொடர்பையும்  ஏற்க வேண்டாம் அல்லது எவர் ஒருவருக்கும்  எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் தர  வேண்டாம்" என்று  பூஜா அந்த ட்வீட்டில்  வலியுறுத்தி இருந்தார்.   அந்த ட்வீட்டிற்க்கு   பிறகான ஒரு மணி நேரத்தை  மிக பதட்டமாக கழித்தார்  பூஜா.  பின்னர்  மீண்டும்  ஒரு ட்வீட் செய்தார்.  அதில் தனது இன்ஸ்டா  கணக்கு மீட்டெடுக்கப்பட்டதாகவும், , அது ஹேக் செய்யப்பட்டிருந்த  நேரத்தில்  பதிவிடப்பட்ட  அனைத்து  பதிவுகள்,  செயல்பாடுகள் அனைத்தும் நீக்கப் பட்டதாக  கூறியிருந்தார். .


பூஜா ஹெக்டேவின் feed இப்போது  சரி  செய்யப்பட்டு விட்டது.   அவரின்  மிகச் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு என்றால் அது  மூன்று நாட்களுக்கு முன்னதாக  அவர் பதிவிட்ட  செல்லப்பிராணி உணவு குறித்த ஒரு பதிவாகும்.


பூஜா ஹெக்டே  தனது  ட்வீட்டுகளில் சமந்தா பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. சமூக ஊடகங்களின் பரவலாக பகிரப்படும்  ஸ்கிரீன் ஷாட்களின்படி, பூஜாவின் இன்ஸ்டா கணக்கிலிருந்து சமந்தாவின் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.   அதில் " அவர் அழகாக இருப்பதாக நான்  நினைக்கவில்லை " என்று எழுதப்பட்டிருந்தது.   பிறகு இது குறித்து அவர் அளித்த  விளக்கத்தால்லும்  அமைதியடையாத சமந்தா ரசிகர்கள் ,   பூஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.   ஆனால்  பூஜாவின் ரசிகர்களோ இதில்  மன்னிப்பு கேட்க எதுவும் இல்லை என்று கூறுகிறார்கள்.


நிச்சயமாக, பூஜாவோ  அல்லது எந்தவொரு பிரபலமோ  கூட,   ஒரு சக  நடிகையை இதுபோன்ற பொது வெளியில்,  இப்படி   அர்த்தமற்ற முறையில் தாக்கி  பதிவிடுவதற்கான   சாத்தியம் மிக குறைவு.


பூஜா ஹெக்டே  தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை.  தவிர இவர்,  மொஹென்ஜோ தாரோ,  ஹவுஸ்ஃபுல் 4  போன்ற இந்தி திரைப்படங்களிலும்  நடித்துள்ளார். அவரது அடுத்த படம் Most Eligibale Bachelor
 எனும் திரைப்படம்.   அதில்  பூஜா,  சமந்தாரூத் பிரபுவின் மைத்துனர் அகில் அக்கினேனி உடன் நடிக்க இருக்கிறார். யே மாயா செசாவ், ஈகா, கத்தி, மெர்சல் மற்றும் ரங்கஸ்தலம் (Ye Maaya Chesave, Eega, Kaththi, Mersal and Rangasthalam ) போன்ற படங்களில் கதாநாயகியாக சமந்தா நடித்திருந்தார்.பூஜா  தனது சமீபத்திய திரைப்படத்தில் ஒரு சிறு வேடமேற்று நடித்திருந்தார்.


- (மொழியாக்கம்) சரிதா சேகர்.