ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நேற்று விவாதம் தொடங்கியது. அந்த விவாதத்துக்கு மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றி வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில், இரு அவைகளும் அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  நேற்று உரையாற்றினார். 


ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நேற்று விவாதம் தொடங்கியது. அந்த விவாதத்துக்கு மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றி வருகிறார்.


 ஆதார் திட்டத்தால் ஏழை மக்கள் பயநடைந்துள்ளதாகவும் மக்களவையில் பிரதமர் மோடி கூறி வருகிறார்.


காங்கிரஸ், ஜனதா தளம், இந்தியாவை பிரிக்கிறது, சர்தார் படேலுக்கு அநீதி செய்தது என்றார்.


மேலும் அவர்,மக்களாட்சி பற்றி பேசுவதற்கு காங்கிரஸுக்கு உரிமை இல்லை என்று கூறி வருகிறார்.


வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார நிலை உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளித்து வருகிறார்.



தேசத்தந்தை மகாத்மா காந்தி கனவு கண்ட தூய்மை இந்தியா திட்டத்தை, மோடி தலைமையிலான மத்திய அரசு மூன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றி காந்தியின் கனவை நனவாக்கியுள்ளதாக, லோக்சபாவில், பாரதிய ஜனதா கட்சி எம்.பி. ராகேஷ் சிங் கூறினார்.