டெல்லி மெட்ரோ ரயில் நிலைய டி.வி.யில் ஆபாச படம் ஒளிபரப்பு
டெல்லி ராஜீவ் சவுக் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள விளம்பரத் திரைகளில் ஆபாச விடியோ காட்சி ஒன்று ஒளிபரப்பாகியது.
கடந்த 9-ம் தேதி ராஜீவ் சவுக் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள பெரிய டி.வி. திரையில் 30 வினாடி நேரம் ஓடுகிற ஆபாச படம் காட்டப்பட்டுள்ளது.
இதைப் பார்த்து அதிர்ந்துபோன பயணிகளில் சிலர், தங்கள் செல்போனில் படம் பிடித்து, அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். அது வைரலாக பரவி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி டெல்லி மெட்ரோ ரெயில்நிலைய நிர்வாகம் கூறும்போது, “ஆபாச படம் காட்டப்பட்ட விவகாரம் எங்களுக்கு தெரியாது. இப்போதுதான் அந்தப் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பணி இன்னும் முடிவு அடையவில்லை” என கூறியது.
இருப்பினும் இந்த விவகாரம் பற்றி டெல்லி மெட்ரோ ரயில் கழகம் விசாரணை நடத்துகிறது.