வன்முறை தொடர்பாக சோனியா காந்தி கூறிய கருத்துகள் கண்டிக்கத்தக்கவை என பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: டெல்லி கலவரப் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்வதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரசின் கைகளில் சீக்கியர்களின் ரத்தக் கரை படிந்துள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் விமர்சனம் செய்தார்.


குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், அந்த சட்டத்தை ஆதரித்தும்  வடகிழக்கு டெல்லியின் பல இடங்களில் திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் தலைமைக் காவலர் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லியின் நான்கு பதற்றமான பகுதிகளில் மட்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாபர் பாத் பகுதியில் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டு அப்பகுதி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு டெல்லியை அண்டை மாநிலங்களுடன் இணைக்கும் மூன்று எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், டெல்லி வன்முறையின் பின்னணியில் பா.ஜ.க-வின் சதி உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இதை தொடர்ந்து அவர், டெல்லியின் தற்போதைய நிலைமைக்கு மையமும் மத்திய உள்துறை அமைச்சரும் பொறுப்பு. மத்திய உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் அவர் காட்டமுடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இவரின் கருத்துக்கு பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார். இது குய்ர்த்து அவர் கூறுகையில்.... " காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அறிக்கை துரதிர்ஷ்டவசமானது மற்றும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சமயங்களில் அனைத்து கட்சிகளும் அமைதி காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு பதிலாக அரசாங்கத்தை குறை கூறுவது அழுக்கு அரசியல். வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா பல ஆலோசனைகளை நடத்தியுள்ளார். இந்த வன்முறையை அரசியலாக்குவது தவறு" என அவர் தெரிவித்துள்ளார். 


மேலும், வன்முறையை "நன்கு திட்டமிடப்பட்ட சதி" என்று அழைத்த காந்தி, கடந்த 72 மணி நேரத்தில் தில்லி காவல்துறை முடங்கிப்போயுள்ளது என்றார்.