வாராக்கடன்களை வசூலிப்பதற்கான அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கிகளுக்கு பெரும் சுமையாக உள்ள வாராக்கடன்களை வசூலிக்கும் வகையில் வேண்டுமென்றே வங்கிகளை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவசர சட்டத்திற்கு நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது. வாராக்கடன்களை வசூலிப்பதற்கான அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து வங்கிகளில் வாராக்கடனை வசூலிக்க புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட உள்ளன.


இந்த அவசர சட்டத்தின் மூலம் ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.