புது டெல்லி: ஆகஸ்ட் 10 ஆம் தேதி கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று புது டெல்லியில் உள்ள இந்திய ராணுவ மருத்துவமனை (Indian Army’s Research and Referral Hospital) செவ்வாயன்று ஒரு இடைநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவருக்கு திங்கள்கிழமை மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது பிரணாப் முகர்ஜி வென்டிலேட்டர் ஆதரவுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது."ஹீமோடைனமிகல் நிலையானது" (Haemodynamically Stable) என்று மருத்துவமனை மேலும் கூறியது. இந்த சொல் இரத்த ஓட்டத்தின் இயக்கவியலின் செயல்பாட்டைக் குறிக்கிறது, அதாவது இதயத்திலும் அவரது மற்ற உடல் பாகங்களில் அவரது இரத்த ஓட்டம் நிலையானது எனப் பொருள்.


ALSO READ |  முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீயின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்


பிரணாப் முகர்ஜியின் மகள் மற்றும் டெல்லி மஹிலா காங்கிரஸ் தலைவர் ஷர்மிஸ்தா முகர்ஜி (Sharmistha Mukherjee), முன்னாள் ஜனாதிபதியை கடவுள் ஆசீர்வதிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ட்விட்டரில், தனது தந்தை 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னாவை (Bharat Ratna) எவ்வாறு வென்றார் என்பதை நினைவு கூர்ந்தார், அதே நேரத்தில் இந்த ஆண்டு அவர் "மோசமாக நோய்வாய்ப்பட்துள்ளார்" எனவும் தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.


 



செவ்வாயன்று, பிரணாப் முகர்ஜியின் (Former President Pranab Mukherjee) நிலைமை மிகவும் மோசமானது என்று மருத்துவமனை கூறியது. "இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீ பிரணாப் முகர்ஜி, ஆகஸ்ட் 10, 2020 அன்று 12.07 மணி அளவில் டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் (ஆர் & ஆர்) ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்" என்று மருத்துவமனையின் மருத்துவ தெரிவித்தனர். 


ALSO READ |  பாரத ரத்னா விருதை பெற்றார் முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி


கொரோனா வைரஸால் (Coronavirus) பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி திங்களன்று ட்விட்டரில் அறிவித்தார். மேலும் அவருடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தார். 


இந்தியாவில் புதன்கிழமை புதிதாக கொரோனா வைரஸ் 60,963 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. பாதிப்பின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 23,29,639 ஆக உள்ளது. நேற்று 834 பேர் மரணமடைந்தனர். இறப்பு எண்ணிக்கை  46,091 ஆக உயர்ந்துள்ளது.