உயர் நீதிமன்றத்திற்கு எதிரான இரண்டு அவதூறான ட்வீட்டுகள் பதிவு செய்ததை அடுத்து,  பூஷனிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யபட்டது. ஆகஸ்ட் 14 ம் தேதி, பூஷனை குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், பூஷண் வெளியிட்ட ட்வீட்டுகள் நீதித்துறையின் செயல்பாட்டின் மீதான நியாயமான விமர்சனம் என்று கூற முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரூ.1 அபராதம் செலுத்த வேண்டும்அல்லது 3 மாதங்கள் சிறையில் தண்டனை, வழக்கறிஞராக பணியாற்ற 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷனிற்கு உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.


அவமதிப்பு வழக்கில் தண்டனையாக செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் ரூபாய் 1 -ஐ அபராதமாக செலுத்துமாறு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 31) உத்தரவிட்டது. அபராதத்தை செப்டம்பர் 15 க்குள் செலுத்தவில்லை என்றால்,  3 மாதங்கள் சிறையில் அடைக்கப்படுவதோடு,  3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றவும் தடை விதிக்கப்படும் என்று தீர்ப்பு வழங்கியது. 


இதை அடுத்து, இது வரை மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறி வந்தவர், ஒரு ரூபாய் அபராதம் செலுத்தி குற்றத்தை ஒப்புக் கொண்டார்.


இதை அடுத்து அவர் ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்தி தனது வழக்கறிஞர் தொழிலை காப்பாற்றிக் கொண்டார்.


தண்டனை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்னொரு வழக்கறிஞர் ராஜீவ் தவன் ஒரு ரூபாயை கொடுத்தார். அதைபெற்றுக் கொண்ட பிரஷாந்த் பூஷன் அதை அபராதமாக செலுத்தி தனது வழக்கறிஞர் தொழிலை காப்பாற்றிக் கொண்டார்.


செப்டம்பர் 2 ம் தேதி ஓய்வு பெற உள்ள நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதி மன்ற பிரிவு இந்த தண்டனையை அறிவித்துள்ளது.


உச்ச நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் என பிரஷாந்த் பூஷன் பலமுறை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.