ஹரியானா மாநிலத்தில் சினை ஆட்டை 8 பேர் கொண்ட கும்பல் கூட்டு வன்கொடுமை செய்ததில் ஆடு உயிரிழந்தாக ஆட்டின் உரிமையாளர் காவல்துறையினரிடம் புகார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹரியானா மாநிலம் மேவட் பகுதியில் அஸ்லு என்பவர் ஆடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த ஆடு சினையாக இருந்துள்ளது. இந்நிலையில் தனது ஆடு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டிருப்பதாக அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதை கண்டு காவல்துறையினர் திகைத்துள்ளனர். 


ஆடு உரிமையாளர் கொடுத்துள்ள புகாரில், கடந்த 25 ஆம் தேதி இரவு, தனது ஆட்டை அதேபகுதியை சேர்ந்த 8 பேர் திருடிச்சென்றதாகவும், குடிபோதையில் அந்த ஆட்டை 8 பெரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தி கொன்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


இதையடுத்து, ஆட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த ஆட்டை மருத்துவமனைக்கு பரிசோதனை செய்வதற்கு அனுப்பியுள்ளனர்.   



இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ள பீட்டா அமைப்பின் நிர்வாகி மீட் அஷர் , விலங்குகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. விலங்குகள் மீது இது போன்ற செயலை செய்பவர்கள் பின்னர் மனிதர்கள் மீதும் நடத்துவார்கள் என பதிவிட்டுள்ளார்.