புது டெல்லி: நிர்பயா வழக்கில் மூன்றாவது குற்றவாளியான அக்‌ஷய் தாக்கூரின் கருணை மனுவையும் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். இதனுடன், முகேஷு மற்றும் அக்‌ஷயின் சட்டரீதியான தீர்வுகளுக்கான அனைத்து விருப்பங்களும் தீர்ந்து விட்டது. முக்பேஷ் குமார் சிங் மற்றும் வினய் சர்மா ஆகிய இரு நிர்பயாவின் கருணை மனுவை ஜனாதிபதி முன்னதாக தள்ளுபடி செய்துள்ளார். இப்போது ஒரே குற்றவாளி பவன் குப்தாவுக்கு ஜனாதிபதியிடம் கருணை மனு அளிப்பதர்க்கான வாய்ப்பு உள்ளது. உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்வதற்கான விருப்பமும் அவருக்கு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிர்பயா வழக்கில் மூன்றாவது குற்றவாளியான அக்‌ஷய் தாக்கூரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் புதன்கிழமை மாலை தெரிவித்தனர். சில நாட்களுக்கு முன்னர், அவரை மரணதண்டனையிலிருந்து காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் "கருணை மனுவை" அளித்திருந்தார். ஆனால் அதை ஜனாதிபதி நிராகரித்தார் என்று ஒரு அதிகாரி கூறினார்.


முன்னதாக குற்றாவாளி முகேஷின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து,  அவர் உச்சநீதிமன்றத்தையும் அணுகியிருந்தார். ஆனால் அங்கும் அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


டெல்லியில் டிசம்பர் 16, 2012 அன்று நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நான்கு குற்றவாளிகளுக்கு எதிராக இரண்டு முறை மரண உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான்கு பேரும் மரண தண்டனையைத் தவிர்ப்பதற்கு மாற்று சட்ட தீர்வுகளைப் பயன்படுத்துகின்றனர். இதனால் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஆகிறது. இந்த சந்தர்ப்பத்தில் குற்றவாளிகள் வெற்றிகளைப் பெறுகிறார்.


பிப்ரவரி 1 ம் தேதி, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றமும் தூக்குப்போடப் பிறப்பிக்கப்பட்ட இரண்டாவது மரண உத்தரவை நிறுத்தியது. இதற்கு எதிராக, மத்திய மற்றும் தில்லி அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகின. ஆனால் உயர் நீதிமன்றமும் குற்றவாளிகளுக்கு ஏழு நாட்கள் அவகாசம் வழங்கியது. இப்போது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய மற்றும் டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.