உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்-ஐ  நியமனம் செய்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. முன்னதாக இரண்டாவது மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட்டின் பெயரை உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். தற்போதைய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு.லலித் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அடுத்த நாள் (நவம்பர் 9 ஆம் தேதி) நீதிபதி சந்திரசூட் 50வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியில் இருப்பார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைமை நீதிபதியாக, நீதிபதி சந்திரசூட்டின் பதவிக்காலம் நவம்பர் 10, 2024 வரை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். இது ஒரு தலைமை நீதிபதிக்கான மிக நீண்ட பதவிக்காலங்களில் ஒன்றாகும். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி லலித் 74 நாட்கள் அப்பதவியில் இருப்பார். அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சந்திரசூட்டை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


நீதிபதி டிஒய் சந்திரசூட் பெற்ற பட்டங்கள்: 


நீதிபதி சந்திரசூட், புது தில்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் BA படித்தார், மேலும் டெல்லி பல்கலைக்கழக வளாக சட்ட மையத்தில் LLB படித்தார். அமெரிக்காவின் ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் எல்.எல்.எம் பட்டம் மற்றும் ஜூரிடிகல் சயின்ஸில் (SJD) முனைவர் பட்டம் பெற்றார்.


மேலும் படிக்க: டிவி சேனல்களில் வெறுப்பு பேச்சு... உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு


வழக்கறிஞர் முதல் நீதிபதி வரை: டிஒய் சந்திரசூட் 


சுப்ரீம் கோர்ட்டிலும், பாம்பே உயர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார். 1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பம்பாய் உயர்நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டு முதல் நீதிபதியாக நியமிக்கப்படும் வரை இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 2000வது ஆண்டு மார்ச் மாதம் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியானார். அதன்பிறகு அக்டோபர் 2013-ல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2016 மே மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.


மேலும் படிக்க: உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக நேரலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ