‛கம்பாலா` போட்டிக்கு ஜனாதிபதி ஒப்புதல்
கம்பாலா எருது போட்டிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
கம்பாலா போட்டியில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு பரிசுகள், பாராட்டு வழங்கப்படும். 100 ஆண்டுகள் பழமையான இது கர்நாடகாவில் பாரம்பரிய விளையாட்டாக இருந்து வருகிறது.
ஜல்லிக்கட்டு போல, கம்பாலாவுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, கர்நாடக அரசு அவசர சட்ட மசோதாவை அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றியது. இதனையடுத்து, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த இம்மசோதாவுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.