புதுடில்லி: இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்கள் டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் ரெஃபரல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மார்புப் பகுதியில் அசௌகரியம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடியரசுத் தலைவர் தற்போது இராணுவத்தின் ஆர் அண்ட் ஆர் மருத்துவமனையில் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக செய்தி நிறுவனமான பி.டி.ஐ தெரிவித்துள்ளது. அவர் தற்போது கண்காணிப்பில் உள்ளார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.


"இந்திய குடியரசுத் தலைவர் இன்று காலை மார்புப் பகுதியில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக ராணுவ மருத்துவமனைக்கு (ஆர் அண்ட் ஆர்) அழைத்துச் செல்லப்பட்டார். அவர் வழக்கமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். அவர் மருத்துவர்களின் கண்கணிப்பில் உள்ளார்” என்று மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட மருத்துவ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


"அவரது உடல்நிலை சீராக உள்ளது” என்று செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


75 வயதான இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் (Ram Nath Kovind), முழு மருத்துவ நோயறிதலும் பிற பரிசோதனைகளும் முடியும் வரை மருத்துவமனையிலேயே தங்கியிருப்பார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்த விஷயங்களை கவனித்து வருகிறார்கள் என்று மருத்துவமனை ஆணையம் தெரிவித்துள்ளது.


இந்த செய்தி குறித்து மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


ALSO READ: வங்க தேசம் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு


ALSO READ: இஸ்லாமியர்கள் இணைந்தால் 4 புதிய பாகிஸ்தான் உருவாகும்: TMC தலைவர் ஷேக் ஆலம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR