54வது சிஆர்பிஎப் வீர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்முறையாக கலந்து கொண்டார்  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் இன்று சிஆர்பிஎப் வீரர்களின் 54வது வீரர் தினத்தையொட்டி, விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துக் கொண்டு விருதுகளை வழங்கினார். மேலும் பணியின் போது உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.


 



 


இந்த நிகழ்ச்சியில், புல்வாமா தாக்குதலில் பலியான 40 வீரர்களுக்கான விருது அவர்களின் குடும்பத்தினருக்கு ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, ‘சிஆர்பிஎப் வீர் பரிவார்’ என்ற செல்போன் செயலியை குடியரசுத் தலைவர் அறிமுகம் செய்து வைத்தார். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 9ம் தேதி சிஆர்பிஎப் வீரர் தினமாக கொண்டாடப்படுகிறது. 


இந்த விழாவில் கலந்துக் கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மறைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.