நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிர்பயா கூட்டு பலாத்காரம் மற்றும் கொலை குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தாக்கல் செய்த கருணை மனுவை புதன்கிழமை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். குப்தா, திங்களன்று இந்திய குடியரசு தலைவர் முன் புதிய கருணை மனுவை தாக்கல் செய்தார். அதாவது மார்ச் 3-ஆம் தேதி மற்ற குற்றவாளிகளுடன் தூக்கிலிட திட்டமிடப்பட்டதற்கு ஒரு நாள் முன்பு அவர் புதிய கருணை மனுவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


25 வயதான பவன், இந்த வழக்கில் கடைசியாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர், முன்னதாக உச்சநீதிமன்றத்திடம் தனது கருணை மனுவை பவன் முன்வைத்தார். முன்னதாக உச்சநீதிமன்றத்தில் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது குடியரசு தலவரை தரப்பில் இருந்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 



மற்ற மூன்று குற்றவாளிகளின் கருணை மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது நான்காவது குற்றவாளியின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


கருணைமனு நிராகரிக்கப்பட்டு 14 நாட்கள் கழித்தே தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டல் இருப்பதால், பவன்குமாரின் கருணை மனுவை தாமதமாக தாக்கல் செய்து தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிப்போட குற்றவாளிகள் தரப்பு முயல்வதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது பவன் குமாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தொடர்பான உத்தரவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.