நாட்டின் 15வது குடியரசுத் தலைவர் தேர்வுக்கான வாக்குப்பதிவு கடந்த திங்கட்கிழமை நடந்து முடிந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்க உள்ளார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பழங்குடி இன் பெண் முதல்வர் என்ற பெருமையை பெறுகிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 3219, மொத்த மதிப்பு 8,38,839; இதில் திரௌபதி முர்மு 5,77,777 வாக்குகள் மதிப்பிலான 2161 வாக்குகள் பெற்றார். யஷ்வந்த் சின்ஹா 2,61,062 வாக்குகள் மதிப்புள்ள 1058 வாக்குகள் பெற்றதாக மாநிலங்களவை பொதுச் செயலாளர் பிசி மோடி தெரிவித்தார்.


மேலும் படிக்க | குடியரசுத் தலைவர் தேர்தலில் பயன்படுத்தப்படும் ‘அழிக்க’ முடியாத சிறப்பு ‘MARKER PEN’


இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஆளும் கட்சியான பா.ஜ.க. தனது தரப்பில் திரௌபதி முர்முவையும், எதிர்க்கட்சிகள் தங்கள் தரப்பில் யஷ்வந்த் சின்காவையும் வேட்பாளராக நிறுத்தின.


மேலும் படிக்க |  நீண்ட கால குடியரசுத் தலைவர் முதல் போட்டியின்றித் தேர்வானவர் வரை - இந்தியக் குடியரசுத் தலைவர் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ