புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் எதிர்வரும் கூட்டத்தொடரில்  குடியரசுத் தலைவர் உரையை 16 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கனிப்பதாக அறிவித்திருக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

16 எதிர்க்கட்சிகளும் ஜனவரி 28ஆம் தேதி  வியாழக்கிழமையன்ரு வெளியிட்ட கூட்டு அறிக்கையில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் பிரச்சினை காரணமாக ஜனவரி 29ஆம் தேதி நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்விஒல் குடியரசுத் தலைவர் வழங்கும் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.



விவசாய சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதாரவளிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து இந்த முடிவை எடுத்துள்ளனர். அதுமட்டுமல்ல, மூன்று புதிய விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினர்.


இந்த நிலையில், பாரதிய கிசான் யூனியன் ( Bharatiya Kisan Union (Lok Shakti)) நொய்டாவில் விவசாயிகளின் போராட்டத்தை நிறுத்துகிறது. வேறு இரு விவசாய சங்கங்கள் தங்கள் போராட்டங்களை நிறுத்துவதாக அறிவித்த அடுத்த நாள் பி.கே.யு (லோக் சக்தி) தலைவர் ஷியோராஜ் (Sheoraj Singh, BKU) சிங் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


Also Read | Tractor Rally வன்முறை தொடர்பாக பாரதிய கிசான் யூனியனுக்கு Delhi Police நோட்டீஸ்


நொய்டாவில் புதிய மத்திய பண்ணை விவசாய சட்டங்களுக்கு எதிரான தனது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக பாரதிய கிசான் யூனியன் (லோக் சக்தி) வியாழக்கிழமை அறிவித்தது.


மற்ற இரண்டு விவசாயிகள் சங்கம் தங்கள் பரபரப்பை முடித்த ஒரு நாள் கழித்து, பி.கே.யு (லோக் சக்தி) தலைவர் ஷியோராஜ் சிங் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


மூன்று புதிய விவசாயச் சட்டங்களை வாபஸ் பெறுதல், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) சட்டப்பூர்வமாக்குதல் மற்றும் சுவாமிநாதன் குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களையை அமல்படுத்த வேண்டும் என்று கோரி விவசாயிகள் சங்கம் டிசம்பர் 2 முதல் தலித் பிரேர்ணா ஸ்தாலத்தில் ( Dalit Prerna Sthal) முகாமிட்டுள்ளது.


Also Read | India: Khalistanis தொடர்பாக இத்தாலிக்கு கண்டிப்பு இங்கிலாந்துக்கு பாராட்டு 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR