SCO Summit 2021: ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இன்னும் உதவ விரும்புகிறோம்: பிரதமர் மோடி
எஸ்சிஓ மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ஆப்கானின் மாற்றம் சட்டவிரோத செயலுக்கு வழிவகுக்கும். எங்களைப் போன்ற அண்டை நாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
புது டெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) வருடாந்திர உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் மற்றும் தலிபான்கள் குறித்து கவலையை பிரதமர் மோடி தெரிவித்தார். அங்கு நிலைமை மேம்படவில்லை என்றால், எதிர்காலத்தில் அது இந்தியாவை உட்பட அண்டை நாடுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். ஆப்கானிஸ்தான் இப்படி நிலையற்றதாக இருந்தால் அடிப்படைவாதம் மேலோங்கி, பயங்கரவாதம் ஊக்குவிக்கப்படும் என்று அவர் கூறினார். இந்த நிலம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மட்டுமல்லாமல் மனித கடத்தல், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தலுக்கும் பயன்படுத்தப்படலாம்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார். முந்தைய அமர்வில், பிரதமர் மோடி தீவிரவாதம் பற்றி பேசினார். அந்த நேரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் காணும் மாநாட்டில் இருந்தார்.
இன்று புதுடில்லியில் இருந்து இரண்டாவது அமர்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, 'ஆப்கானிஸ்தானின் சமீபத்திய மாற்றங்கள் நம்மைப் போன்ற அண்டை நாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். எனவே, இந்தப் பிரச்சினையில் பிராந்திய கவனம் மற்றும் ஒத்துழைப்பு அவசியம்.
தீவிரவாத குழுக்களை ஊக்குவிக்கும்:
ஆப்கானிஸ்தானில் உறுதியற்ற தன்மை மற்றும் மத அடிப்படைவாதம் தொடர்ந்தால், அது உலகம் முழுவதும் பயங்கரவாத மற்றும் தீவிரவாத சித்தாந்தங்களை ஊக்குவிக்கும் என்று அவர் கூறினார். இவர்களை பார்த்து மற்ற தீவிரவாத குழுக்களும் வன்முறையின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற ஊக்கம் பெறலாம். இந்த சூழலில், நாம் நான்கு விசியங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். முதல் பிரச்சினை என்னவென்றால், ஆப்கானின் மாற்றம் சட்டவிரோத செயலுக்கு வழிவகுக்கும். எந்தவித பேச்சுவார்த்தை இல்லாமல் ஆட்சி மாற்றம் நடந்தது.
ALSO READ | ஆப்கானில் கடும் நெருக்கடி; உடமைகளை விற்று சாப்பிடும் அவல நிலையில் மக்கள்
ஆப்கானிஸ்தான் மக்களின் கவலை:
ஆப்கானிஸ்தான் மக்களின் நிலை குறித்து பேசிய பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தான் நாட்டில் பொருளாதார மந்தம் அதிகரித்து வருவதாக கூறினார். இதனால் போதைப்பொருள், சட்டவிரோத ஆயுதங்கள் போன்ற செயல்களுக்கு வழிவகுக்கும். ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா இன்னும் உதவ விரும்புகிறது. ஆனால் மனிதாபிமான உதவிகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவின் நம்பகமான நட்பு நாடு ஆப்கானிஸ்தான்:
மேலும் பேசிய பிரதமர், "இந்தியா பல ஆண்டுகளாக அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஆப்கானிஸ்தானின் நம்பகமான நட்பு நாடாக இருந்து வருகிறது. உள்கட்டமைப்பு முதல் கல்வி, சுகாதாரம் மற்றும் திறன் மேம்பாடு, ஒவ்வொரு துறையிலும், ஆப்கானிஸ்தானின் ஒவ்வொரு பகுதியிலும், நாங்கள் எங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளோம் என்றார்.
ALSO READ | அனைத்து வித நெருக்கடியிலும் துணை நிற்கும் இந்தியா: பிரதமர் மோடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR