இன்று தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தை பொறுத்தவரை வரும் நாடாளுமன்ற தேர்தலில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாதையை பின்பற்றுவோம். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே வாஜ்பாய் வெற்றிகரமான கூட்டணி ஆட்சியை நடத்திக் காட்டியவர் எனக்கூறி 1990-களில் முன்னாள் பிரதம மந்திரி அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு உதவிய "வெற்றிகரமான கூட்டணி அரசியலை" நினைவுகூறும் விதமாக பேசினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அரசியலில் ஒரு புதிய கலாச்சாரத்தை கொண்டுவந்த தத்ரூபமான தலைவர் அடல் ஜி, வெற்றிகரமான கூட்டணி அரசியலை நடத்தினார். பிராந்திய கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். எனவே பழைய நண்பர்களை வரவேற்கத் தயாராக உள்ளோம்.


பா.ஜ.க., தனது சொந்த பலத்துடன் வெற்றி பெற்றாலும் கூட, நமது கூட்டாளிகளுடன் அரசாங்கத்தை நடத்த நாங்கள் விரும்புகிறோம். எங்கள் பழைய நண்பர்களை நாம் மதிக்கிறோம், எங்கள் கதவுகள் எப்போதும் அனைத்து கட்சிகளுக்குத் திறந்தே இருக்கின்றன எனவும் மோடி தெரிவித்தார்.


2019 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலப்படுத்திக் கொள்வதற்கான ஒரு குறிப்பை இது காட்டுகிறது. 


கடைசியாக நடைபெற்ற 2014 லோக்சபா தேர்தலில் பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தை மற்றும் கம்யூனிஸ்ட் என ஆறு கட்சி கூட்டணி தமிழகத்தில் போட்டியிட்டது. மொத்தம் 39 தொகுதிகளில் இரண்டு இடங்களை பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இன்று பாஜக, மற்றொன்று பாமக. மீதி தொகுதிகளை அதிமுக வெற்றி பெற்றது. திமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற வில்லை.