நாக்பூரில் புதிய மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜனவரி 28 ஆம் தேதி திறந்து வைக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் மெட்ரோ வழித்தடங்கள் பல்வேறு கட்டங்களாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கடந்த 2014 ஆம் ஆண்டு மெட்ரோ வழித்தடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.


முதற்கட்ட மெட்ரோ கட்டுமானப்பணிகள் முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். தற்போது இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் நாக்பூர் அக்வா-லைன் புதிய மெட்ரோ வழித்தடத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார்.


இந்த புதிய மெட்ரோ வழித்தடத்தை ஜனவரி 28 ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ பாதை 11 கிலோமீட்டர் நீளம் கொண்டது.