லக்னோ: காங்கிரஸ் கட்சியின் கிழக்கு உத்தர பிரதேசத்தின் பொறுப்பாளரான பிரியங்கா காந்தி வதேரா திங்களன்று லக்னோவில் பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்த பிரசாரத்துக்கு "மிஷன் உத்தர பிரதேசம்" என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மேற்கு உத்தரப் பிரதேச மாநில துணைத் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோருடன் கலந்துகொள்கிறார். மேலும், உ.பி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜ்பப்ர் மற்றும் காங்கிரஸ் தலைவர் ஆர்.பி.என்.சிங் ஆகியோரம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



இந்த "மிஷன் உத்தர பிரதேசம்" பிரசாரம் மூலம் நான்கு நாட்கள் உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் பிரியங்கா காந்தி முகாமிட்டு அங்குள்ள முக்கிய தலைவர்களையும், மக்களையும் சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. அவர் லக்னோவில் உள்ள அமோசி விமான நிலையத்திலிருந்து காங்கிரஸ் அலுவலகம் சாலையோர பிரசரத்தை மேற்கொள்கிறார். 


 



பிரியங்கா காந்தி பிப்ரவரி 11 முதல் 14 வரை லக்னோவில் இருப்பார். உ.பி. மாநிலத்தில் உள்ள மொத்தம் 80 மக்களவை தொகுதிகளை குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். 


கடந்த சனவரி 23 ஆம் தேதி முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் கிழக்கு உத்தர பிரதேசத்தின் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டதை அடுத்து முதல் முறையாக பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைப்போல மேற்கு உத்தர பிரதேசத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஜோதிராதித்யா சிந்தியாவும் முதல் முறையாக பிரசாரத்தில் ஈடுப்பட உள்ளார்.