புதுடெல்லி: உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கிறது. ஆளும் சமாஜ்வாடி, பா.ஜனதா, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் களத்தில் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேச தேர்தலில் பிரியங்கா காந்தியை பிரசார களத்தில் இறக்கி விட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. 


காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்து பேசினேன். உத்தரபிரதேச தேர்தலில் பிரியங்கா பிரசாரத்தில் ஈடுபட ஒப்புதல் அளிக்கப்பட்டது. எங்களது வேண்டுகோளை பிரியங்காவும் ஏற்றுக்கொண்டு உள்ளார். அவர் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்வார். எங்களது பிரசாரத்தில் பிரியங்கா காந்தி முக்கிய பங்கு வகிப்பார். அவரது பிரசாரம் பயண திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பாப்பர் கூறியுள்ளார்.
தற்போது முதல்முறையாக அவரை மாநிலம் முழுவதும் பிரசார களத்தில் காங்கிரஸ் இறக்குகிறது.