புதுடெல்லி: சோன்பத்ரா செல்ல போலீசார் தடுத்து நிறுத்தியதால் கோபமடைந்த பிரியங்கா காந்தி நாராயன்பூரில் தனது ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சோன்பத்ராவில் நிலத்தகராறில் கடந்த 17 ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியாகினர். மேலும் 24 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்து வாரணாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்து வாரணாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து உ.பி. காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி ஆறுதல் தெரிவித்தார். 


இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க துப்பாக்கிச் சூடு நடைபெற்ற கிராமத்தை நோக்கி சென்ற பிரியங்கா காந்தியை, 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாகக் கூறி மிர்சாபூர் மற்றும் வாரணாசியின் எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் கோபமடைந்த பிரியங்கா காந்தி நாராயன்பூரில் தனது ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.


இதுக்குறித்து ஏ.என்.ஐ செய்தி ஊடகம், நான் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது என பிரியங்கா காந்தி கூறியதாகவும், அதற்கு உ.பி போலீசார் தரப்பில், சோன்பத்ரா மாவட்டத்துக்குள் செல்ல மட்டும் தான் தடை செய்தோம், அவரை கைது செய்யவில்லை என்று விளக்கம் அளித்ததாக கூறப்பட்டு உள்ளது.